மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு சற்றுமுன் வெளியான முக்கிய அறிவிப்பு
இலங்கையின் பல எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் 95 ரக ஒக்டேன் பெட்ரோல் மற்றும் சுப்பர் டீசல் கையிருப்பு இல்லை என பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
95 ரக ஒக்டேன் பெட்ரோல் மற்றும் சுப்பர் டீசல் கையிருப்பை பராமரிக்க 3 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமாக முதலீடு செய்ய வேண்டியிருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனினும் அந்த எரிபொருளை விற்பனை செய்வதன் மூலம் பெருநிறுவன எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்குக் கிடைக்கும் இலாபம் சுமார் 45,000 ரூபாயாக மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே நாடு முழுவதும் உள்ள பல எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் இந்த இரண்டு வகை எரிபொருட்களும் கிடைப்பதில்லை என்றும் பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் கூறியுள்ளது.
95 ரக ஒக்டேன் பெட்ரோல் மற்றும் சுப்பர் டீசலின் தினசரி விற்பனை 500 லீற்றருக்கும் குறைவாக இருப்பதால், ஒரு கையிருப்பை விற்க இரண்டு வாரங்களுக்கு மேல் ஆகிறது என குறிப்பிட்டுள்ளது.
மேலும் 45,000 ரூபாய் தள்ளுபடித் தொகை ஊழியர்களின் சம்பளத்தைக் கொடுக்கக் கூடப் போதுமானதாக இல்லை என்றும் அந்தச் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
