இலங்கையில் சில பாடசாலைகளுக்கு அவசர விடுமுறை வெளியான முக்கிய அறிவிப்பு
தெனியாய கல்வி வலயத்திற்குட்பட்ட 04 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக வலய கல்வி பணிப்பாளர் நிஷாகா ஹெட்டிகொட தெரிவித்துள்ளார்.
தெனியாய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் அண்மைய நாட்களாக பரவிவரும் இன்புளுவென்சா அறிகுறிகளை கொண்ட வைரஸ் தொற்றினால் குறித்த 04 பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளன
பாடசாலை மாணவர்களிடையே வைரஸ் தொற்று பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இன்றும் நாளையும் தெனியாய தேசிய பாடசாலை, தெனியாய புனித மத்தேயு பாடசாலை, தெனியாய ராஜபக்ஷ வித்தியாலயம் மற்றும் பல்லேகம சித்தார்த்த ஆரம்ப பாடசாலை ஆகியவற்றுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது
தென் மாகாண ஆளுநர் அலுவலகத்தின் ஆலோசனைக்கமைய இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளது
