நாட்டில் உச்.ச.த்.தை தொட்ட மின்சார கட்டணம்...! வெ.ளி.யான அறிவிப்பு
நடப்பாண்டில் இரண்டாம் காலாண்டிற்கான விசேட மின்சாரக் கட்டணத் திருத்தம் இன்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விலை அதிகரிப்பால் மின் உற்பத்திக்கான செலவு உயர்ந்துள்ளமையை அடிப்படையாகக் கொண்டு நெஷனல் சிஸ்டம் ஓப்பரேட்டர் நிறுவனம் சமர்ப்பித்த திருத்தப்பட்ட மதிப்பீடுகளுக்குப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
இது தொடர்பாகக் கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் கே.பி.எல். சந்திரலால் கருத்துத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மேலும் தெரிவித்த அவர், குறைந்த மின்சாரத்தைப் பயன்படுத்தும் நுகர்வோருக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் இந்தத் திருத்தம் அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதனடிப்படையில் 180 அலகுகளுக்குக் குறைவாக மின்சாரத்தைப் பயன்படுத்தும் சாதாரண நுகர்வோருக்கு எவ்வித கட்டண அதிகரிப்பும் ஏற்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக அலகு
இருப்பினும், 180 அலகுகளுக்கு மேல் மின்சாரத்தைப் பயன்படுத்தும் நுகர்வோருக்குச் சுமார் 18 சதவீதம் வரை கட்டண அதிகரிப்பு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
புதிய மதிப்பீடுகளின் அடிப்படையில், 180 முதல் 210 அலகுகள் வரை பயன்படுத்துவோருக்கு 1760 ரூபாயும் மற்றும் 210 முதல் 240 அலகுகள் வரை பயன்படுத்துவோருக்கு 2210 ரூபாயும் மேலதிகக் கட்டணமாக அறவிடப்படவுள்ளது.
அத்துடன் 270 அலகுகளுக்கு மேல் மின்சாரத்தைப் பயன்படுத்துவோருக்கு 2600 ரூபாயும் 300 அலகுகளுக்கு மேல் பயன்படுத்துவோருக்கு 3110 ரூபாயும் மேலதிகக் கட்டணமாக விதிக்கப்படவுள்ளதோடு நுகர்வோர் பயன்படுத்தும் மேலதிக அலகுகளைப் பொறுத்து இத்தொகையில் மாற்றங்கள் ஏற்படக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
