TAMIL VIRAL MEDIA

கூட்டணியில் அதிரடி திருப்பம்! வந்தது தமிழகமே எதிர்பார்த்த பிரேக்கிங் நியூஸ்!

 

சென்னை : தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றி கழகம் (தவெக) கட்சி, ஆட்சி அமைக்கும் முயற்சியில் அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை முடுக்கி விட்டுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன.


தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, காங்கிரஸ், பாமக உள்ளிட்ட சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கலாம் என்ற கருத்துகள் எழுந்தன.

 


ஆனால், சிறிய கட்சிகளுடன் உருவாகும் கூட்டணி ஸ்திரமற்ற ஆட்சியை மட்டுமே வழங்கும், திமுக நாளுக்கு நாள் ஏதாவது குடைச்சலை கொடுத்துக்கொண்டே இருக்கும் என்பதால், பெரிய கட்சியான அதிமுகவுடன் இணைவது தான் சிறந்த வழி என்று அரசியல் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலரும் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், தவெக மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் இந்தப் பேச்சுகள் முன்னேறும் எனக் கூறப்படுகிறது.


குறிப்பாக, தவெக சட்டமன்ற உறுப்பினர் ஆதவ் அர்ஜுனாவின் மாமியாரும், அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான லீமா ரோஸ் இந்தப் பேச்சுவார்த்தையில் முக்கியப் பங்கு வகிப்பதாக தெரிகிறது. “எடப்பாடி யார் முதலமைச்சர் ஆவார்” என்று அவர் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.


தவெக தலைமை இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றாலும், இரு கட்சிகளிடையேயான உயர்மட்டப் பேச்சுகள் தீவிரமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.


108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தவெக, அதிமுகவின் ஆதரவுடன் பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கையை எட்டும் வாய்ப்பு உள்ளதால், இந்தக் கூட்டணி ஸ்திரமான ஆட்சியை உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த வளர்ச்சிகள் தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. மேலும் விவரங்கள் வெளியாகும் வாய்ப்புகள் உள்ளன.


English Summary : The Tamilaga Vettri Kazhagam party, which secured 108 assembly seats, is holding discussions with the AIADMK for a possible alliance to form the government. This move aims to ensure a stable administration. Reports indicate that talks are progressing and Edappadi Palaniswami could be considered for the Chief Minister position.