யாழை தொடர்ந்து மட்டு நகரிலும் இளம் மனைவி தவறான முடிவில் மரணம்
வாழும்காலம் இன்னும் இருக்கையில் தவறாக முடிவெடுத்து திரும்பமுடியாத பயணம் சென்ற சகோதரி..! மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பழுகாமம் பகுதியில் நேற்று முன் தினம் (20.05.2026) 22 வயதுடைய வேணுக்கன் சுமேதா உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். மேலும் தெரியவருவதாவது, குறித்த யுவதி 4 வருடங்களுக்கு முன்பு வேணுக்கன் என்பவரை திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவரது கணவருடன் வாக்குவாதம்.. இதையடுத்து மனவேதனையில் இருந்த சுமேதா, நேற்று முன் தினம் (20.05.2026) தனது உயிரை மாய்த்துக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சடலம் தற்போது மட்டக்களப்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். ஆழ்ந்த அனுதாபங்கள் குடும்பத்தினருக்கும் உறவுகளுக்கும்...
