TAMIL VIRAL MEDIA

திருச்சி கிழக்கு தொகுதி உறுப்பினர் பதவியிலிருந்து விலகினார் விஜய்!

 

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.


அவரின் பதவி விலகல் கடிதம் சட்டப்பேரவை செயலரிடம் இன்று அதிகாரபூர்வமாக வழங்கப்பட்டுள்ளது.


முதலமைச்சர் விஜய்யின் சார்பில் அமைச்சர்கள் செங்கோட்டையன் மற்றும் வெங்கடரமணன் ஆகியோர் சட்டப்பேரவை செயலரைச் சந்தித்து பதவி விலகல் கடிதத்தைக் கையளித்தனர்.


முதலமைச்சராக பொறுப்பேற்றதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட முக்கிய நிர்வாக நடவடிக்கைகளில் ஒன்றாக இந்த பதவி விலகல் பார்க்கப்படுகிறது.


இதனையடுத்து, திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.