TAMIL VIRAL MEDIA

ஒரு கண நேர கோபம்... ஒரு குடும்பத்தின் வாழ்நாள் துயரம்

 

💔😢 "ஒரு கண நேர கோபம்... ஒரு குடும்பத்தின் வாழ்நாள் துயரம்"

களுத்துறை | Meewanapalana | நெஞ்சை உடைக்கும் சோகம்

என்னென்ன காரணங்கள் 💔💔  

தேவை இல்லாத சிந்தனைகள் 💔💔

பரிதாபமான உயிர்கள் 💔💔

களுத்துறை மாவட்டம் மீவனபாலான பகுதியில் நடந்த இந்த சம்பவம் கேட்டு கண்ணு கலங்குது 😭

25 வயது ஷானிகா செவ்வந்தி. நீண்ட காலமா காதலிச்ச காதலரோட விரைவில் திருமணம் பண்ண திட்டமிட்டிருந்தாங்க ❤️

என்ன நடந்தது?

வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஊரில் நடந்த தானசாலைக்கு காதலரோட சேர்ந்து போக ஆசைப்பட்டிருக்காங்க. ஆனா காதலர் அவங்கள அழைத்து செல்லாம தனியா போயிருக்காரு. 

"என்னை விட தானசாலையே அவருக்கு முக்கியமா போச்சா" என்ற ஒரே எண்ணம்... அந்த கோபம், ஏமாற்றம், மன உளைச்சல் ஷானிகாவை தப்பான முடிவை எடுக்க வைச்சுருக்கு 😭

உடனே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர், உயிருக்கு போராடும் நேரத்தில் தன் அம்மாகிட்ட கண்ணீர் மல்க சொன்ன வார்தை தான் நெஞ்சை பிழியுது 

"அம்மா... நான் அவரைப் பயமுறுத்த வேண்டும் என்பதற்காகத்தான் இதைச் செய்தேன்... இறக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அல்ல..."

ஆனா துரதிர்ஷ்டவசமா, மருத்துவர்களின் எல்லா முயற்சியும் தோத்து போச்சு. அந்த இளம் உயிர் பிரிஞ்சுருச்சு 🕊️💐

இந்த சம்பவம் நமக்கு கத்து தரும் பாடம்:

காதல், கோபம், ஏமாற்றம், பிரிவு... இதெல்லாம் வாழ்கையில் எல்லாருக்கும் வரும். ஆனா அந்த உணர்வுகள் நிரந்தரம் இல்லை. ஒரு சில மணி நேரம், சில நாள்ல மாறிடும். 

ஆனா உணர்சிவசத்தில் எடுக்குற ஒரு கண நேர முடிவு நிரந்தர இழப்பாக மாறிடும் 💔

சில நேரம் நாம ஒருத்தரை பயமுறுத்த, கவனம் ஈர்க பண்ற செயல், நம் உயிரையே பறிச்சுரும் 😔

📌 மன அழுத்தம், காதல் பிரச்சனை, தாங்க முடியாத வேதனை இருந்தா தனியா சுமக்காதீங்க. பெற்றோர், நண்பர்கள், நம்பகமான ஒருவரிடம் பகிர்ந்துக்கோங்க. பேசுங்க 🙏

🕊️ ஷானிகா செவ்வந்தியின் ஆன்மா சாந்தியடையட்டும். அவங்க குடும்பத்துக்கு இந்த பேரிழப்பை தாங்கும் மனவலிமை கிடைக்கட்டும் 💐

"ஒரு கண நேர உணர்சி... ஒரு வாழ்நாள் இழப்பாக மாறிவிடக் கூடாது." 🕯️😔