வெளியான காபொத சாதரண தர பெறுபேறுகள் பரீட்சைத் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு
2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு பரீட்சைகள் திணைக்களம் முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த பரீட்சைப் பெறுகள் நேற்றிரவு வெளியான நிலையில் மீள்திருத்தத்திற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பரீட்சை பெறுபேறுகளின் மீள்மதிப்பீட்டிற்கான விண்ணப்பங்களை எதிர்வரும் 25ஆம் திகதி முதல் ஜூலை 8ஆம் திகதி வரை சமர்ப்பிக்க முடியும்.
அதற்கமைய https://onlineexams.gov.lk/eic என்ற இணையத்தள முகவரியூடாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சையானது, கடந்த 2026 பெப்ரவரி 17ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை 3,547 பரீட்சை மத்திய நிலையங்களில் நடைபெற்றது.
இந்தநிலையில், 382,249 பாடசாலைப் பரீட்சாரத்திகளும் 69,214 தனிப்பட்ட பரீட்சார்த்திகளுமாக மொத்தம் 451,463 பரீட்சார்த்திகள் இந்தப் பரீட்சைக்கு தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

