ஆடி அமாவாசை அன்று சூரிய கிரகணம் ; முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கலாமா?
பித்ருக்களின் ஆசி கிடைக்கும் ஆடி அமாவாசை நாளில் சூரிய கிரகணம் வருவது ஒரு அரிதான நிகழ்வு ஆகும். இந்த ஆண்டு ஆகஸ்ட் 12, 2026 புதன்கிழமை அன்று ஆடி அமாவாசை வருகிறது. அன்றைய தினம் இலங்கை, இந்திய இரவு நேரத்தில் சூரிய கிரகணம் நிகழ்வதால், இதனால் பெரிய தோஷங்கள் எதுவும் இல்லை என கூறப்படுள்ளது.
மாதம்தோறும் அமாவாசை வந்தாலும் தை புரட்டாசி ஆடி மாதங்களில் வரும் அமாவாசையன்று எமது முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் செய்தால் அவர்கள் மன குளிர்ந்து நமக்கு ஆசி அளிப்பார்கள் என்பது ஐதீகம்.
ஆடி மாதத்தில் முன்னோர்களை வழிபட்டு, அவர்களின் ஆசியை பெறுவதற்குரிய மிக முக்கியமான நாள் ஆடி அமாவாசை. வருடத்தில் வரும் மிக முக்கியமான அமாவாசைகளில் ஒன்றான ஆடி அமாவாசை நாளில் இந்த ஆண்டு சூரிய கிரகணமும் இணைந்து வருகிறது.
இதனால் வழக்கமான முன்னோர் வழிபாட்டினை செய்யலாமா? தர்ப்பணம் கொடுக்கலாமா? என பல சந்தேகங்கள் மக்களிடம் எழுந்துள்ளது.
சூரிய கிரகணம் அன்று ஆடி அமாவாசை
இந்து சமய ஆன்மீக வழிபாட்டில் சூரிய கிரகணம், அமாவாசை ஆகிய இரண்டுமே மிகவும் முக்கித்துவம் வாய்ந்த சக்தி வாய்ந்த நாட்களாகும். அதிலும் தட்சிணாயன காலத்தின் துவக்கமாக வரும் ஆடி அமாவாசை, முன்னோர் வழிபாட்டிற்கும் அம்பிகை வழிபாட்டிற்கும் மிக முக்கியமான நாளாக கருதப்படுகிறது. கிரகணத்தின் போது கோவில்கள் அனைத்தும் அடைக்கப்படுவது வழக்கம்.
இந்த சமயத்தில் மந்திர ஜபம் தவிர மற்ற பூஜைகள், வழிபாடுகள் செய்யக் கூடாது என்பார்கள். இதனால் சூரிய கிரகணம் மற்றும் ஆடி அமாவாசை இரண்டும் இணைந்து வரும் நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கலாமா, கூடாதா? என்கிற சந்தேகம் எழுந்துள்ளதுஒரு வருடத்தில் வரும் அமாவாசைகளில் மிக முக்கியமானவையாக கருதப்படுவது தை அமாவாசை, ஆடி அமாவாசை மற்றும் மகாளய அமாவாசை ஆகும்.
மற்ற மாதங்களில் வரும் அமாவாசைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து, பித்ரு கடன் நிறைவேற்ற முடியவில்லை என்றாலும், இந்த மூன்று அமாவாசைகளை தவற விடாமல் அவசியம் தர்ப்பணம் கொடுத்து, முன்னோர் வழிபாட்டினை செய்ய வேண்டும் என சொல்லப்படுகிறது
ஆடி அமாவாசையில், பித்ருலோகத்தில் இருக்கும் நம்முடைய முன்னோர்கள், தன்னுடைய குடும்பத்தினர் செய்யும் வழிபாடுகள், தர்ப்பணம், தானம் ஆகியவற்றை நேரடியாக பூமிக்கு வந்து ஏற்றுக் கொண்டு, அவர்களுக்கு ஆசி வழங்குவதாக சொல்லப்படுகிறது.
அதனால் ஆடி அமாவாசை, பித்ருதோஷம் உள்ளிட்ட மிக கடுமையான துன்பங்களில் இருந்து விடுபடுவதற்கு ஏற்ற நாளாக கருதப்படுகிறது.
சூரிய கிரகணம் இரவு நேரத்திலேயே வருகிறது. இதனால் கோவில் நடை அடைப்பு போன்றவை இந்த நாளில் இருக்காது. பொதுவாகவே அமாவாசை அன்று தான் சூரிய கிரகணம் வரும்.
இருந்தாலும் இரவு நேரத்தில் ஏற்படும் சூரிய கிரகணத்தால் தோஷம் ஏதும் ஏற்படாது. இதனால் வழக்கமான முறைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து, வழிபடலாம்.
கிரகண நாளில் வரும் அமாவாசை என்பதால் இது மிகவும் சக்தி வாய்ந்த நாளாக கருதப்படுகிறது.
தான தர்மங்கள்
இந்த நாளில் செய்யப்படும் தான தர்மங்கள், புதிய நதிகளில் நீராடுவது, காகத்திற்கு உணவு வைப்பது ஆகியவை பித்ரு தோஷங்களை நீக்கும் என சொல்லப்படுகிறது. எனவே ஆகஸ்ட் 12ம் தேதியன்று இரவு தான் சூரிய கிரகணம் நிகழ உள்ளது.
அதனால் வழக்கம் போல் ஆகஸ்ட் 12ம் தேதியன்று காலை சூரிய உதயத்திற்கு பிறகு நதிகள் அல்லது கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபடலாம். அதே போல் பகல் நேரத்தில் முன்னோர்களுக்கு இலை போட்டு படையல் வைப்பது, காகத்திற்கு உணவு அளிப்பது போன்ற சடங்குகளை செய்யலாம்.
